பிரம்மம் இருக்கிறது என்று நம்பப்படுவது ‘சத்’ என்றும். இல்லை என்பது ‘அசத்’ என்றும் கூறப்படுகிறது.
ஆனால், பிரம்மம் இல்லாத இடம் என்று எதையும் சொல்ல முடியாது. பிரம்மம் இருப்பதை நம்புவதற்கு ‘சத்’ என்றும்.
இல்லை என்று சொல்பவர்களுக்கு ‘அசத்’தாக இருந்தாலும் அங்கும் நான் இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
மேலும், எல்லா புலன் நுகர் பொருள்களையும், அறிவது ஆனால், உண்மையில் எல்லா புலன்களும் அற்றது.
ஒன்றிலும் பற்றற்றது. ஆனாலும், எல்லாவற்றையும் தாங்குவது, காப்பது.
குணம் அற்றதாக இருந்தாலும், குணங்களை அனுபவிப்பது. இதுதான் பரப்பிரம்மமான பரமாத்மாவின் உலகியலுக்கு அப்பாற்பட்ட தன்மையாவும்.
மனித குணத்தில் இருந்து பற்றுடன் இருப்பது. இறை குணத்தில் பற்று இல்லாமல் இருப்பதும் தள்ளி இருப்பதாகும்.
சராசரமான எல்லா பிராணிகளின் உடைய உள்ளும், புறமும் பரப்பிரம்மமான பரமாத்மா கடலில் கிடக்கின்ற பனிக்கட்டியின் உள்ளும், புறமும் எங்கும் நீர் நிறைந்திருப்பது போல நிறைந்து இருக்கிறார்.
அசைவன, அசையாதனவற்றில் வடிவிலும் கூட பரப்பிரம்மமே நிறைந்திருக்கிறது. நீர்தான் பனிக்கட்டி. பனிக்கட்டிதான் நீர். அது போலவே நிறைந்து இருக்கிறார்.
சூரிய கிரணங்களில் உள்ள பரமாணு வடிவான நீர் சாதாரணமாக மக்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அவர்களுடைய அறிவுக்கு அப்பாற்பட்டது.
அதுபோல எங்கும் நிறைந்த பரமாத்மா அந்தப் பரமாணு அளவுள்ள நீரைக் காட்டிலும் மிகவும் நுண்ணியது. ஆகையால் சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாதது. அறிவுக்கு அப்பாற்பட்டதும் ஆகும் என்கிறார் கிருஷ்ணன்.
அதாவது, அகில உலகிலும் உள்ளும், புறமும் பரமாத்மா இல்லாத இடமே இல்லை. அருகேயும் உள்ளார். தொலைவிலும் உள்ளார்.
அருகில் என்றும், தொலைவில் என்றும் நினைக்கின்ற போது விஞ்ஞான ஆனந்த மயமான பரமாத்மா நிறைந்து இருக்கிறார்.
இந்த தத்துவத்தை அறிந்த நம்பிக்கை உள்ள மாந்தருக்கு பரமாத்மா மிக அருகில் உள்ளார். நம்பிக்கை அற்றவர்களுக்கு மிகத் தொலைவில் இருக்கிறார் என்று விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அறியத்தக்க அந்தப் பரப்பிரம்மம் ஆகாயத்தைப் போல் எங்கும் ஒரே சீராக நிறைந்து இருந்த போதும். பிரிந்துள்ளது போல காட்சி தரும்.
அதுபோல பரமாத்மா பிளவற்றவர் ஆயினும் சகல சராசரப் பிராணிகளிடமும் ஆத்மா வடிவாகத் தனித்தனி போல தோற்றம் அளிக்கிறார்.
அனைவரையும் தாங்கிக் காப்பவரான பரமாத்மா படைத்து, காத்து, அழிக்கிறார். பிரம்மாவாக படைக்கிறார். விஷ்ணுவாக காக்கிறார். ருத்ரனாக எல்லாவற்றையும் அழிக்கிறார் அந்த பரமாத்மா தான் பிரம்மா, விஷ்ணு, பரமசிவன் என்ற மூவருமாய் உள்ளார் என்கிறார்.
அந்தப் பரபிரமம் ஒளிகளுக்கு எல்லாம் ஒளி ஆனது மாயைக்கு அப்பாற்பட்டது ஞானத்தினால் அடையத் தக்கது. எல்லோருடைய இதயத்திலும் சிறப்பாக விளங்குவது என்கிறார்.