கேசவா! “ரிஷிகளால் பலவாறு சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள்” என்கிறான் அர்ச்சுனன்.

மந்திரம் கண்டவர்கள், சாஸ்திரங்களையும், இயற்றியவர்கள் ரிஷிகள். எல்லாம் விவரங்களையும் தங்கள் நூல்களிலும், புராண இதிகாசங்களிலும், பல விதங்களில் விவரிவாக வர்ணித்து இருக்கிறார்கள். அவற்றின் சாரத்தை கிருஷ்ணன் மிக சில சொற்களில் கூறுகிறார்.

ருக் வேதம், யாஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் மற்றும் இந்த நான்கு வேதங்களுடைய சம்கிதை, பிராம்மனம் எனப்படுகின்ற இரு பகுதிகள் என்று பொருள்.

உபநிஷத்துக்கள் அனைத்தும் வேதங்களின் வெவ்வேறு சாகைகளும் இவற்றில் அடக்கம். இவை அனைத்திலும் இந்த தத்துவம் பிரித்துக் கூறப்படுகிறது.

இவ்விதம் ரிஷிகள், வேதங்கள்,
பிரம்மாந்திரங்கள் சான்றுகளாகக் கூறுகிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! நுண்ணிய ஐம்பெரும் பூதங்களும், அகங்காரமும், புத்தியும், மூலபிரகிருதியும், பத்துப் புலன்களும், மனமும், புலன்களுடைய நுகர் பொருள்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தையும் குறிக்கும் எனக் கூறுகிறார் கிருஷ்ணன்.

கேசவா! பத்துப் புலன்கள் என எவற்றை குறிப்பிடுகிறீர்கள் என்பதைக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! வாக்கு, கை கால், ஆண் பெண், குறி, புட்டம் இவை ஐந்தும் செயற்புலன்கள் ஆகும். காது, சருமம், கண்கள், நாக்கு, மூக்கு இவை ஐந்தும் அறியும்புலன்கள் ஆக இவை பத்துப் புலன்கள் இவற்றிற்குக் காரணம் அலங்காரம் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

விருப்பு, வெறுப்பு,இன்பம், துன்பம், உடற்கட்டு, சைதன்ய சக்தி மேலும் உறுதி ஆகிய மாறுபாடுகளும் உடல் சுருக்கமாகும். 

‘இச்சை’ என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! எப் பொருள்களை சுகத்திற்குக் காரணம் என்றும், துயரம் போக்குவன என்றும் மனிதன் கருதுகிறானோ அவற்றை அடைவதற்கு ஏற்படும் பற்றோடு கூடிய விருப்பம் ‘இச்சை’ எனப்படும்.

வாசனை, பேராசை, எதிர்பார்ப்பு, பேராவல், விருப்பம் முதலிய பல வகைகள் உண்டு. இது மனதின் விகாரம். ஆகவே, உடலின் விகாரங்களில் ஒன்றாக என்னப்படுகிறது.

துயரத்திற்குக் காரணமாகவும், சுகத்திற்குத் தடையாகவும் தோன்றும் பகைமை உணர்ச்சி துவேசம் அல்லது வெறுப்பு எனப்படுகிறது.

பகை, பொறாமை, அருவருப்பு, கோபம் என்ற நிலைகளில் வெளிப்படும் இதுவும் மனதின் விகாரமே. ஆகவே, இதையும் உடலின் விகாரம் என்கிறார்.

வேண்டிய பொருள் கிடைப்பது வேண்டாதது விலகுவது இதனால் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி சுகமாகும்.

வேண்டாதது வந்து சேர்ந்தாலும், வேண்டியது விலகினாலும் ஏற்படும் மன வேதனை தான் துக்கம். இவைகளும் மனதின் உடல் விகாரங்கள் ஆகும்.

சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்றும் சாத்விகமான நிலை நிறுத்தும் சக்தியின் ஒரு அம்சமான உறுதியை கூறுகிறார். இது மனதின் விகாரத்தில் அடங்கும் இவைகள் எல்லாம் உடலின் விகாரங்களின் சுருக்கமாகும் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply