பதிமூன்றாவது அத்தியாயம்

உடல், ஆத்ம சம்பந்த யோகம்.

‘சேத்ரம்’ என்றால் உடல், ‘சேத்ரக்ஞன்’ என்றல் ஆத்மா இவை இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டது.

அஞ்ஞானத்தினாலேயே இரண்டும் ஒன்று போல் தோன்றுகின்றன.

உடல் என்பது சடம். விகாரம் அடைவது, நொடிப் பொழுதே இருப்பது, அழியக்கூடியது.

ஆத்மா  என்பது அறிவே வடிவானவன். விகாரம் அற்றவன் என்றும் உள்ளவன் அழியாதவன் என்பதை மேலே சொன்னவாறு பிரித்து காட்டுவதால் இந்த அத்தியாயத்திற்கு ‘உடல், ஆத்ம சம்பந்த யோகம்’ என்று பெயர்.

அர்ச்சுனா! இந்த உடல் சேத்ரம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இதை எவன் அறிகிறானோ அவனை சேத்ரகஞன் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் கிருஷ்ணன்.

அதாவது வயலில் விதைக்கப்பட்ட விதை அதற்குரிய காலத்தில் பயனைத் தருகிறது அது போல இந்த உடலில் விதைக்கப்பட்ட முன் பிறவிகளில் செய்த கர்மங்களின் பதிவுகள் என்னும் விதைகளின் பயன்கள் தக்க சமயத்தில் வெளிப்படுகின்றன.

ஆத்மா மிகவும் ஆழமானது. ஆகவே, அதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இதை வெவ்வேறாக பெண் பாலாக, ஆண்பாலாக இரண்டும் மற்றதாகவும் விளக்குகிறார். ஆத்மா பால் வேற்றுமை இல்லாதவன் என்றும் உள்ளவன் குணம் மாறுதல்கள் அற்றவன் ஞானமே வடிவானவன் எனக் கூறுகிறார் கிருஷ்ணன்.

ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றுதான். இரண்டும் நானே என்று தெரிந்து கொள். இரண்டுக்கும் இடையே சிறிது கூட வேற்றுமை கிடையாது.

பரமாத்மாவான நானே ஜீவத்மாவிலும் வெவ்வேறு விதமாகத் தோன்றுகிறேன். உருவில் பல விதமாகத் தோற்றம் அளிக்கிறேன். இதை நன்றாக அறிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! உடல் எது?
மேலும் எத்தகையது? எந்த விகாரங்களோடு கூடியது? எதிலிருந்து எது உண்டாயிற்று? மேலும் அந்த ஆத்மா யார்? எத்தகைய பெருமை கொண்டவன் என்ற இவை அனைத்தையும் சுருக்கமாக என்னிடத்தில் கேள் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply