கேசவா! ’மௌநீ’ என்றால் பேசாதவர் என்று தானே பொருள். ஆனால், இங்கே பகவானே எப்பொழுதும் சிந்தித்து இருப்பவர் என்று பொருள் கூறுவதன் உள்நோக்கம் என்ன என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! மனிதன் வாயைத் திறந்து மட்டும் பேசுவதில்லை. மனதாலும் பேசுகிறான். ஓயாமல் பல விசயங்களைச் சிந்திப்பது தான் மனம் பேசுவதாகும்.
பக்தனுடைய மனதில் பகவானைத் தவிர வேறு நினைவே இருப்பதில்லை. எப்போதும் பகவானுடைய சிந்தனையிலேயே தன்னை மறந்து விடுவான். இது தான் உண்மையான மௌனம்.
வாய்விட்டுப் பேசாமல் மனதில் மற்ற விசயங்களைச் சிந்திப்பது புறத்தோற்றத்தில் காணப்படும் மௌனம். மனதில் வேறு எண்ணமே இல்லாமல் சொல்லைத் தூயதாகவும், கட்டுப்படுத்தியும் வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படும் வெளிப் படையான பயன் தரும்.
அன்பு கொண்ட பத்தனின் இலக்கணத்தை கூறுகிறார். அவருடைய சொல் இயல்பாகவே.பரிசுத்தமாகவும் கட்டுப்பட்டும் இருக்கும்.
பக்தன் பேச்சில் மட்டும் மௌனமாக இருக்கிறார் என்று பொருள் அன்று. அவருடைய நா ஓயாமல் பகவத் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம், குணங்களைப் பாடிக் கொண்டே இருக்கலாம். அதனால், உலகிற்கு அரிய நன்மை உண்டு.
இங்கு வாய் பேசாமல் இருப்பது என்பது மௌனம் அன்று. தவிர பகவான் பக்தரின் மூலம் தம்முடைய பக்தியை பிரசாரமும் செய்வார்.
நாவடக்கம் உள்ளவர் தாம் பகவானுடைய பக்தர் பேசாமலே இருப்பவர் என்று கற்பனை செய்து கொள்ளக் கூடாது.
பகவான் கீதையை பிரச்சாரம் செய்பவர்கள் தமக்குப் பிரியமான காரியம் செய்கிறார்கள். எனவே,பகவானையே சிந்தித்து இருக்கும் தன்மை எய்தியவர் ‘மௌநீ’ எனப்படுகிறார் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
மேலும், கூறுகிறார், பகவானுடைய பக்தர்களுக்கு உலகியல் பொருட்கள் வந்தாலும், போனாலும் அக்கறை இல்லை. தமக்கு மிகவும் பிடித்த வகையில் பகவானை அடைந்து விட்ட திலேயே எப்பொழுதும் சந்தோசமாக இருப்பார்.
ஆகவே, வெளிப் பொருட்கள் வருவதாலும், போவதாலும் அவருடைய சந்தோசத்தில் எவ்வித மாறுபடும் கிடையாது. எது நிகழ்ந்தாலும் நிறைவுடன் இருப்பர்.
தன்னுடைய உடைமைகள் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணம் செய்துவிட்டு ஒன்றும் இல்லாதவர். வீடு வாசல், உடல், கல்வி, புத்தி எல்லாம் பகவானுடைய உடமை ஆகிவிட்ட பின் அவன் பிரம்மச்சாரி.
இல்லறத்தார் ஆனாலும் சரி, வனத்தில் இருப்பவர் ஆகட்டும் அவர் பற்று அற்றவர்தான்.
ஒருவர் உடலில் தன் அகங்காரம், மமகாரம், பற்றையும் விட்டுவிட்ட பின் வீட்டில் இருந்தாலும் வீடற்ற தவசியே ஆவார்.
பகவானுடைய நேரடி தரிசனம் பெற்றவருக்கு எல்லா சந்தோசங்களும் தீர்ந்துவிடும். பகவானிடம் திட நம்பிக்கை ஏற்பட்டு இருக்கும்.
உறுதி அசைக்க முடியாதது, தடுமாறாதது. ஆகவே, அந்த பக்தன் சாதாரண மனிதர்கள் போல் காமம், கோபம், லோபம், மோகம், பயம் முதலிய மனவிகாரங்களுக்கு ஆட்பட்டு தர்மத்தில் இருந்தோ, ரூப சிந்தனையில் இருந்தோ விலக மாட்டார்கள்.
பகவானை அடையும் உபாயத்தையும், பயனையும் சொல்லிய பின்னர் பக்தனின் இலக்கணம் கூறப்படுவதால், குணா தீரர்களான தத்வம் அறிந்தவர்களுடைய இலக்கணங்களுடன் ஒத்துப் போவதால் இவை சாதகர்களின் இலக்கணம் அல்ல. சித்த புருசர்களின் இலக்கணமாகவே இருக்கிறது.