கேசவா! பட்சபாதமற்றவர் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! நீதிமன்றத்திலும், பஞ்சாயத்திலும் சாட்சி கூறும் போதோ அல்லது பூசலை தீர்க்கும் போதோ இப்படி வேறு ஏதாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் போதோ..

தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றோ, தனக்கு வேண்டியவன் என்றோ, நண்பன் என்றோ அல்லது தனக்கு வேண்டாதவன் என்ற வெருப்பினாலோ,  வேறு எந்த காரணத்தினாலும் பொய் சாட்சி சொல்வது…

நீதிக்குப் புறம்பாகத் தீர்ப்புக் கூறுவது, வேறு ஏதாவது நேர்மையற்ற முறையில் ஆதாயம் கருதியோ, பிறருக்குத் துன்பம் விளைவிக்க வேண்டும் என்றோ, எண்ணாதவன் இப்படிப்பட்ட செயலை செய்யாதவன் பாராபட்சம் பார்க்காதவன் ஆவான் என்கிறார்.

கேசவா! “பகவானுடைய பக்தன், துக்கங்களில்
இருந்து விடுதலை பெற்றவன் என்று கருதுவதை விவரியுங்கள்” என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! துயரத்தைத் தரக்கூடிய நிகழ்ச்சி நேரும் போதும்,துயரம் அடையாதவர் என்று பொருள். அதாவது, உடலில் நோய் வந்தாலும், மனைவி, மக்கள் பிரிவு வந்தாலும்.

செல்வம், வீடு இவற்றை இழந்தாலும் இவை பகவானுடைய பிராப்தத்தின் விளைவுகள் என எண்ணி துக்கமோ, துயரமோ அடைய மாட்டான். அவனே துக்கத்தில் இருந்து விடுதலை பெற்றவன் ஆவான்.

உலகில் என்ன நேர்ந்தாலும், யாரை எவ்விதம் நடத்த விரும்பினாலும் அது பகவானுடைய லீலை மாய சக்தியின்  விளையாட்டு.

மனிதன் இதை நான் செய்தேன். இது என் திறன் என்று மனதில் வீணாக செருக்குக் கொள்கிறான்.

பகவானுடைய அடியவர் இந்த ரகசியத்தை நன்கு உணர்ந்தவன். ஆகவே, அவன் எப்பொழுதும் பகவானுடைய கைப்பாவையாகத் தன்னை பாவிக்கிறான்.

பகவான் எப்படி ஆட்டி வைக்கிறாரோ அப்படி மனம் உவந்து ஆடுகிறான். கொஞ்சம் கூட எதிலும் செருக்குக் கொள்வதில்லை.

உலகோர் பார்வையில் அவர் ஏதோ செயலில் ஈடுபட்டவர் போலத் தோன்றினாலும் அதற்கு நான் காரணம் அல்ல. கடவுள் தான் காரணம் என்று இருப்பவன். எல்லாச் செயல்களையும் துறந்தவன் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply