உலாவும் நட்சத்திர வானில்
உலாவி வந்த முருக நிலா வந்த போதும்
உன்முக ஒளியில் மங்கியதோ
பலாச் சுளை தித்திப்பு தமிழ் சுவையில் கண்டேன்
குலாவும் குடும்ப வாழ்வில்
தமிழ் பண்பு கண்டேன்.
முருகா என்ற மூன்றெழுத்தில்
உயிர் மூச்சு இருக்குதப்பா
தருவே கற்பக விருட்சமாய்
காலம் எல்லாம் இருப்பாய்
மருத நிலத்து மக்களுக்கு
மலர்ச்சி நீ தருவாய் கருணி வாழ் முருகா
காலம் எல்லாம் காப்பாய்
தரணி காக்கும் முருகா
தாமதம் இன்றி வாராய் குறத்தி வள்ளி முருகன்
குமுறும் மக்களைப் பாராய்
சரணம் சொல்லும் பக்தர்
சங்கடம் போக்க வாராய் பரமன் மகனே முருகா
பக்தர் குறையை தீராய்
சக்தி வேலால் வென்றாய்
சகதியில் விலாமல் காப்பாய்
பக்தி கொண்ட மக்களை
பாசம் கொண்டு காப்பாய்
திக்கு தெரியாமல் இருப்பவருக்கு
திசையை காட்டி காப்பாய்
முக்தி வழி காட்டி
மோட்ச தீபம் காட்டுவாய்
மண்ணுலகம் காக்க வந்தவனே
மானிடரை கரை சேர்ப்பாய்
கண்ணொளி பட்டால் போதும்
காட்சி எல்லாம் மாறும் எண்ணம் நல்லதாய் ஆகும்
நாணிலம் மகிழ்ச்சியில் ஆடும்
விண்ணவர் கூட வாழ்த்துவர்
விதியை நீ மாற்றியதால்
உன்னை வணங்கினால் போதும்
உயர்ந்த எண்ணம் தங்கும்
மின்னல் போல் தீமை
விலகி ஓடியே போகும் திண்ணமான செயல் செய்ய
திடம் வந்து சேரும் முண்டி முளைத்து வரும்
விதைத்த நல் விதைகள்
வாசல் கதவு மூட
ஞான வாசல் திறக்கும் வாசல் புறம் மூட
அக வாசல் திறக்கும் வேசம் களைந்தது உடலில்
பிறவா தீபம் தெரியும் நேசம் கொண்டதன் பயன்
உன் திருவடி கிடைக்கும்
பக்கத்தில் நீ இருப்பதால்
பயம் இல்லை முருகா தக்க சமயத்தில் காக்க
வேல் இருக்கு முருகா துக்கம் வராமல் தடுக்க
பார்வை ஒன்றே போதும் சிக்கல் வந்தாலும் தடுக்க
கரம் இருக்கும் முருகன்.
எட்டு திசையிலும் இருப்பாய்
ஏழு கடலிலும் இருப்பாய் மொட்டு மலரிலும் இருப்பாய்
முதிர்ந்த கனியிலும் இருப்பாய்
சட்டியில் வந்த சஷ்டி
குல தெய்வம்ஆனாய் வட்டி போட்டுகொடுத்தாய்
வடிவேலன் பாதம் பற்ற
கோயில் தேடிவந்த கால்கள்
கோலம் போட்டு அமர்ந்தது
தாவித் திரிந்த மனம்
தாமரை முகம் பார்த்தது காவி தரித்த முருகன்
காலடி பற்ற துடித்தது பாவிஆகாமல் என்னை
பாது காத்து நின்றது
முருகு என்ற அழகன்
முகம் பார்த்து மலர்ந்தேன்
திருகு மனம் கொடுத்து
வளைந்து வாழ வைத்தாய்
சருகு ஆனாலும் பயனாய்
உரமாய் ஆவது போல கருகி விடாமல் என்னை
காத்த வடி வேலன்
தாங்கி எனைக் காக்க
தங்க முருகன் இருக்க தேங்கி நிற்கும் குட்டை
ஆகாமல் எனைக் காத்தாய்
ஏங்கித் தவித்தேன் பாதம்வர
ஏற்றுக் கொண்டாய் பக்தியை
ஓங்கி வளர்ந்து உள்
ஒளி காட்டி விட்டாய்.